தினம் ஒரு திருக்குறள்
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
விளக்கம்:
படை, குடி, கூழ் (பொருட்செல்வம்/உணவு), அமைச்சு, நட்பு, அரண் ஆகிய இந்த ஆறு அங்கங்களையும் முழுமையாக உடையவனே அரசர்களுள் சிங்கத்தைப் போன்றவன் ஆவான்.


புதிய காணொளிகள்
வரலாறு
இந்த பகுதியில் தமிழர், சாதி, மொழி, தனி நபர்கள் மற்றும் உலக வரலாறுகளை ஆதார நூல்கள், தரவுகள், நிகழ்வுகள் அடிப்படையில் தமிழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் தக்கார், வரலாற்றில் உள்ள பொய் மற்றும் உண்மை இடையிலான வேறுபாடுகளை ஆய்வு செய்கிறது, ஆதாரத்தோடு விளக்குகிறது.
பிரபலமான காணொளிகள்:
FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி? - இந்த காணொளியில் இந்தியாவில் FC, BC, MBC, SC, ST போன்ற Community Classes (சாதி பிரிவுகள்) எப்படி உருவாயின? 18–19ஆம் நூற்றாண்டில் சாதிய அமைப்பு எப்படி இருந்தது? ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த சமூக மாற்றங்கள் முதல், அயோத்தி தாச பண்டிதர், நடேச முதலியார், காந்தி, அம்பேத்கர் போன்ற முன்னோர்களின் போராட்டம் வரை — பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்ட அதிர்ச்சி வரலாறு இந்த பகுதியில் விளக்கியிருக்கிறேன். தீண்டாமை, அடக்குமுறை, இடஒதுக்கீட்டு சட்டம் உருவான உண்மையான காரணங்கள், யாரும் சொல்லாத தமிழ் குடிகள் வரலாற்றின் மறைக்கப்பட்ட பகுதி!. முழு காணொளியை பார்க்க 👉 FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி?
அழிவிலிருந்து மீண்டெழுந்த தமிழ் - இந்த காணொளியில் தமிழ் மொழியின் சொற்கள், இலக்கணம், ஒலியமைப்பு, “ஒரு சொல் – பல பொருள்” போன்ற அதிசயங்களை ஆழமாக ஆய்வு செய்து உலகம் முழுக்க தமிழின் பெருமையைச் சொல்லித்தந்தவர் ராபர்ட் கால்டுவெல். அவரின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூல் எப்படி தெற்கிந்திய மொழிகள்—தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு—மற்றும் சில வடஇந்திய பழைய பேச்சு மொழிகளும் தமிழிலிருந்து உருவானவை என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது என்பதை இந்த காணொளியில் விளக்கியிருக்கிறேன். முழு காணொளியை பார்க்க 👉 அழிவிலிருந்து மீண்டெழுந்த தமிழ்
சாதிகள் உருவான வரலாறு - இந்த காணொளியில் சாதிகள் உருவான உண்மை வரலாறு மற்றும் தமிழ் குடிகள் ஒரே மூலத்திலிருந்து எப்படி உருவானது என்பதை ஆதாரங்களுடன் விரிவாக விளக்கியிருக்கிறேன். சாதி என்பது பிறப்பால் வந்ததா, அல்லது மனிதர்களின் தொழில், அரசியல் மற்றும் அதிகார ஆசைகளால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பா? என்பதற்கான தெளிவான பதிலை இந்த பகுதி வழங்குகிறது. முழு காணொளியை பார்க்க 👉 சாதிகள் உருவான வரலாறு
வரலாறு பக்கத்தில் வெளியான பிற எல்லா காணொளிகளையும் பார்க்க 👉 வரலாறு
அரசியல்
இந்த பகுதியில் தமிழ்நாடு & இந்திய நடப்பு அரசியல் செய்திகள், தேர்தல், இடஒதுக்கீடு, மொழி, சாதி, இனம், நிகழ்வுகள் பற்றிய காணொளிகள் தெளிவான பகுப்பாய்வு மற்றும் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
பிரபலமான காணொளிகள்:
தமிழர் அடையாளமும் அரசியலும்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை - இந்த காணொளியில் தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் தமிழர் அடையாளத்தை மற்றும் அரசியல், கோயில், ஊர், நகரத்தின் பெயர் மாற்றம் மூலம் சமஸ்கிருத திணிப்பு குறித்து விரிவான அரசியல் பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
முழு காணொளியை பார்க்க 👉 தமிழர் அடையாளமும் அரசியலும்: கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை
காமராஜரை வீழ்த்திய சனாதன அரசியல்! | வரலாறு பேசும் உண்மை - இந்த காணொளியில் தமிழுக்கு எதிரான சனாதனத்தின் மொழி அரசியல் குறித்து ஆழமான அரசியல் பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன். அரசியலில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உள்ளன: 1️⃣ வெளிப்படையான அரசியல் 2️⃣ மறைமுகமான அரசியல். மு.க. ஸ்டாலின் தமிழ் பற்று எப்படி தமிழை காக்கிறது மற்றும் சனாதன மொழி அரசியல் என்றால் என்ன? அது எங்கு எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
முழு காணொளியை பார்க்க 👉 காமராஜரை வீழ்த்திய சனாதன அரசியல்! | வரலாறு பேசும் உண்மை
அதிமுக வீழ்ச்சியின் ரகசியம்! | பாஜக பயன்படுத்திய துருப்புச் சீட்டு யார்? - இந்த காணொளியில், தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்த ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியல் தொடக்கம் முதல் அதிமுக பிளவு வரை அவரது பயணம் மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணி அரசியல் வியூகங்களை ஆழமாக பகுப்பாய்வு செய்து விளக்கியிருக்கிறேன்.
முழு காணொளியை பார்க்க 👉 அதிமுக வீழ்ச்சியின் ரகசியம்! | பாஜக பயன்படுத்திய துருப்புச் சீட்டு யார்?
அரசியல் பக்கத்தில் வெளியான பிற எல்லா காணொளிகளையும் பார்க்க 👉 அரசியல்
அருள்பா பார்வை
இந்த பகுதியில் கல்வி, சமூகப் பிரச்சினைகள், தன்முனைப் பாற்றல், மெய்ஞானம், தத்துவம், நடப்பு நிகழ்வுகள் மற்றும் சமகால விவாதங்களை தமிழில் ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது.
பிரபலமான காணொளிகள்:
சமஸ்கிருத பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி? - இந்த காணொளியில் உங்கள் பெயர் உண்மையிலேயே தூய தமிழா? கண்டறிவது எப்படி? சமஸ்கிருதம் அல்லது பிற மொழி தாக்கம் உள்ள பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி? பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி? உங்க குழந்தைக்கு எப்போ பெயர் மாற்றம் செய்யணும்? என்ற கேள்விகளுக்கு முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். முழு காணொளியை பார்க்க 👉 சமஸ்கிருத பெயரை தூய தமிழ் பெயராக மாற்றுவது எப்படி?
தமிழ் தக்கார் உருவானது ஏன்? - இந்த காணொளியில் தமிழ் தக்கார் YouTube Channel உருவானதற்கு காரணமான நிகழ்வுகள், அருள் பாண்டியராசன் வாழ்க்கை, படிப்பு, குடும்ப பின்னணி, தமிழ் மொழி மற்றும் தமிழர் வரலாற்றை அறிய உருவான ஆர்வம்—இவை அனைத்தும் எப்படி இந்த சேனலின் அடித்தளமாக அமைந்தது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன். முழு காணொளியை பார்க்க 👉 தமிழ் தக்கார் உருவானது ஏன்?
தமிழர் வரலாறு முக்கியம் ஏன்? - இந்த காணொளியில் தமிழர் வரலாறு முக்கியம் ஏன்? பொய்யான தகவல்கள் மற்றும் வரலாற்றை கண்டறிவது எப்படி ? வரலாறு என்னும் ஆயுதம் தமிழரின் அடுத்த தலைமுறையை எப்படி காக்கிறது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன். முழு காணொளியை பார்க்க 👉 தமிழர் வரலாறு முக்கியம் ஏன்?
அருள்பா பார்வை பக்கத்தில் வெளியான பிற எல்லா காணொளிகளையும் பார்க்க 👉 அருள்பா பார்வை
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.